அகரம் உகரம் அறிந்த பேர்க்கு
சிகரம் வாய்க்கத் தடைகல் ஏது
நகரம் மகரம் பயின்ற பேர்க்கு
பகரும் வாக்கில் பிழைகிடை யாது
வகரம் உணர்ந்து வாழ்ந்திடும் பேர்க்கு
வசியம் எதிலும் குறைவு படாது
யகரம் கைவசம் ஆயின பேர்க்கு
யமனும் எதிர்வர துணிவிருக் காது.
6 APRIL 2021