உள்ளே....
சொல்லை வளைத்துக் கருத்தை எய்யும்
சூக்குமம் தெரிந்தவர் என்பத னாலே
இலக்குகள் ஆகிய இதயங்கள் எல்லாம்
இரண்டே நொடிகளில் இவர்வசம் ஆகும்.
ராஜ காந்தீபன் -
வார்த்தைக் கார வல்வில் ஓரி!
வாழ்க்கை வானத்தின் இளைய தாரகை!
காலம் சொல்வதைக் கையால் எழுதும்
கனவு தேசத்துச் சுருக்கெழுத்தாளன்.
காண்டீபம் எழுந்தால் பாரதம் பிறக்கும்
காந்தீபம் எழுந்தால் பாரதம் சிறக்கும்!
எழுக காந்தீபம்! எழுக! புதிய
கவியுகம் தன்னைத் தமிழர்க்குத் தருக!.
இலக்கிய சக்கரவர்த்தி இளந்தேவன்.