உள்ளே....
ஞானசித்தர் அவர்களிடம் தீட்சைப் பெற்ற அன்பர்களில் நானும் ஒருவன்.
பல்வேறு கால கட்டங்களில் சித்தர் பெருமான் அவர்களின் உபதேசங்கள் கேட்கப் பெற்றேன்.
அவருடன் பல இடங்களுக்கு பயணம் செய்யும் பாக்கியம் பெற்றேன்.
அவர் எழுதிய நூல்கள் படிக்கும் வாய்ப்புப் பெற்றேன்.
எனக்கு உணர்த்தப் பெற்றவை எனக்கு உரைக்கப் பெற்றவை ஏராளம் .
நான் பெற்ற இந்த அரும் பெரும் நிகழ்வுகளின் தகவல்களில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற
பேராவல் மற்றும் உலகோர் அனைவரும் அறிந்து பயன் பெற வேண்டும் என்னும் ஆதங்கம் இவை இணைந்து இந்த நிகழ்வுகளின் தொகுப்பு நூல் பரம் பொருளின் தூண்டலில் உருவாயிற்று.
இந்நூலை குருநாதர் ஞானசித்தர் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
இன்ஜினியர் கி. தானப்ப பிள்ளை.