உள்ளே....
நல்ல குருநாதன் நவின்ற பொருளென்ன
நானும் அறியச்சொல் - வாலைப் பெண்ணே
வல்ல இறையோனை வாழ்த்திப் பணிந்திட
வளருங் கலையது சேதிச் சொன்னேன்.
கள்ள மலமதைக் கட்டறுத் தேப்போட
காட்டும் வழியென்ன - வாலைப் பெண்ணே
உள்ளக் குகையிலே உள்ளொளி கண்டதில்
உன்னை அமிழ்த்திடு சேதிச் சொன்னேன்.