Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR
உண்டு தினம் உடல் வளர்த்து
மண்ணு தின்ன கொடுப்பதற்கோ
மண்ணில் இவர் வாழுகிறார் - மனமே
மண்ணில் இவர் வாழுகிறார்
கண்டு கண்டு தெரிந்த பின்னும்
பண்டிருந்தார் போலிவரும்
மாண்டவராய் போவதென்ன - மனமே
மாண்டவராய் போவதென்ன.