உள்ளே....
இறை ஞானம்
உயிரோடு ஒட்டி இருக்கிறது
வாழ்வின் அர்த்தத்தைப்
புரியவைக்க இது தேவை.
காரணம்
மனித வாழ்வே
இறையை அடைவதற்காக
அமைந்தது
இதை உணர உதவும்
அறிவே ஞானம்.
மண்ணைப் புரிந்து
அறவழி நடந்து
அமைதியில் திளைத்து
விண்ணை நினைக்க
நமக்கு கைக்கொடுப்பது
இறை ஞானம்
என்பதால்
அதை உணர
அதிசிரத்தை வைக்க வேண்டியது
அவசியம்
அதன் நோக்கத்திலே
இந்த வெளிப்பாடு
உங்களை ஈடேற்ற வந்துள்ளது.
வாழ்வோம் வாழ்விப்போம்.