உள்ளே....
கால் தடம்
கற்றுக் கொடுப்பது போல்
யார் கற்றுத்தர இயலும்?
இது
போலியோ
நகலோ
நடிப்போ அல்ல
அனுபவித்தத் தடம்
மற்றவருக்காகப்
பதித்துவிட்ட படம்.
தேடி அலைபவர்களை
தூண்டிலிட்டு இழுத்து
துணிந்து பயணிக்க வைக்கும்
நெஞ்சின் உரம்.
வழியுண்டு என்று
வரவழைத்துச் செல்லும் பாங்கு
பார்வைக்கு மட்டுமல்ல
பகுத்தறிவிற்கும் தொகுத்தளிக்கும்
உண்மை வரிகள்.
மண்தடம்
இந்த கால்தடம்
மனித குலத்திற்கு
ஒளி விளக்கு.