உள்ளே....
உண்மையான ஞானம் பெற மாற்றிப் பிறக்க வேண்டும். குருவே தாயும் தந்தையும் என நினைக்க வேண்டும்.
உண்மையான ஞானத்தைத் தொட்டால் எதிர்ப்பவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
உண்மையில்லாத இடத்தில்தான் பிரச்சனை வருகிறது.
உண்மையிலிருந்துதான் உண்மை பிறக்கும். பொய்யிலிருந்து உண்மை பிறப்பதில்லை.
உண்மை சொல்வது கஷ்டம் என்றால் கர்மாவில் இருக்கிறோம் என்று பொருள்.
உண்மையை உணர மறுக்கிறோம். பயத்தினால்.
உண்மையை உணராதவர்களுக்கு, உறவு உறமாகும்.
உண்மையை உணருங்கள். அது வாழ்க்கையில் சுகமான அனுபவமாகும்.