உள்ளே....
மனிதா,
நீ
தராசு முள்
மற்றவர் உன்னுள் புகுந்தாலும்
மற்றவர்க்குள் உன்னைப் புகுத்தினாலும்
கர்ம சுமையை ஏற்றிவிட்டாய்.
புற தாக்கமற்று
இயல்பாக
இரு,
உன் தனித்தன்மை புலப்படும்.
உன் பிறப்பின்
இரகசியம் கைகூடும்.
எதற்காக வந்தாயோ
அதை முடித்துவிட்டு
பாரமற்று செல்லும் பாக்கியம்
உன்னை
தேடிவந்தடையும்.