Special_Day Quotes

Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR


தங்கத் தமிழாலே என்னை

தூங்க வைத்த அன்னை

தான்

தூங்கிப் போனா ளிங்கே

ஏங்க விட்டு என்னை

சொல்லி அழுதாலும்

தீராது சோகம்

யாரன்பு வந்து

ஈடாகக் கூடும்....

முன்னை செய்த வினைதானே

உன்னை தந்த திங்கே

அன்பு என்ற மொழிகூட

உன்னால் உணர்ந்தேன் நானே

உயிரென்ற ஒன்று

அது எனக்கு நீயே

நான்

இன்னும் வாழும்போது

நீ இல்லாமல் ஏது?..

Mother's Day 2021


உலகை ஆளும் ஞானத் தமிழென

பிலவ ஆண்டில் சூளுரைத் திடுவோம்

நிலவுல கெங்கும் தமிழின் ஆட்சி

கலவர மின்றி கண்ணியம் காப்போம்

அன்பும் அறிவும் எம்மிரு கண்ணென

என்றும் எங்கும் விளங்கிட வைப்போம்

தனிநபர் சுதந்திரம் பேணியிம் மண்ணில்

இனியொரு போர்வர விடவே மாட்டோம்

நோயும் பகையும் புகுந்திடா வண்ணம்

ஓயா தென்றும் ஒற்றுமை காப்போம்

ஞானக் கல்வியை இளமையில் புகட்டி

வானவர் நமைத்தொழ வழிவகைச் செய்வோம்

ஒழுக்கம் ஒன்றே உய்வெனச் சொல்லி

இழுக்கிலா வாழ்வை அறவழி அமைப்போம்

இனிய புத்தாண்டு முதல்நாள் இன்றே

இணைவோம் அனைவரும் ஒருகுலம் என்றே

வாழ்வோம் வாழ்விப்போம்!

வாழ்வோம் வாழ்விப்போம்!!

Tamil New Year 2021


பெண்ணைப் போற்றுதும்

பெண்ணைப் போற்றுதும்

பெருமையும் வாழ்வும்

பிழைப்படா திருந்திட

மண்ணில் தாயென

மறைபுகழ் படைத்தனள்

எண்ணிடும் உறவெலாம்

ஏந்தியே கொடுத்தனள்

விண்ணைத் தொடும்வரை

உடலுக்கு உரியவள்

என்றுங் காலையில்

தொழத்தகும் தெய்வமாய்

இன்றும் இருப்பவள்

பிறவிப்பயனுற

வணங்கி வளர்மினே.

Women's Day 2021


இத்தரை உளவரை நித்திரை

இனியிலை பத்தரைத்

தமிழுக்குத் தொண்டே

யென்வேலை்

International Mother Language Day 2021

7

Steps for your Success

24/7

Connectivity with Master